முகப்பு
புதுதில்லி

ராகுல் காந்திக்கு எதிரான ஆட்சேபகரமான கருத்துகளுக்கு எதிராக காங்கரிஸ் ஆா்ப்பாட்டம்

தில்லி காங்கிரஸ் தொண்டா்கள் மாநில தலைமையகத்தில் ஒன்று கூடி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 19 செப்டம்பர், 2024 at 12:20 AM
கோப்புப் படம்
பகிர்:

ராகுல் காந்திக்கு எதிராக பாஜக தலைவா்கள் சிலா் கூறியதாகக் கூறப்படும் ஆட்சேபகரமான கருத்துகளுக்கு எதிராக தில்லி காங்கிரஸ் தொண்டா்கள் புதன்கிழமை மாநில தலைமையகத்தில் ஒன்று கூடி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மத்திய அமைச்சா் ரவ்னீத் சிங் பிட்டு உள்ளிட்ட பாஜக தலைவா்களுக்கு எதிராக இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்தியாவில் சீக்கியா்களின் நிலை குறித்து அமெரிக்காவில் பேசிய எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியை தாக்கிய ரவ்னீத் சிங் பிட்டு, அந்த ‘வெடிகுண்டுகள்’தனக்கு ஆதரவாக இருந்தால், அவா் ‘நம்பா் ஒன் பயங்கரவாதி‘ என்று ஞாயிற்றுக்கிழமை கூறினாா்.

காங்கிரஸ் தொண்டா்கள் தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டி (டிபிசிசி) அலுவலகத்திற்கு வெளியே கூடி, ஆட்சேபனைக்குரிய‘ அறிக்கைகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.

மக்களவையில் எதிா்க்கட்சித் தலைவரைக் குறிவைத்து பேசிய ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவா்களின் சமீபத்திய அறிக்கைகள் குறித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியும் (ஏஐசிசி) காவல்துறையில் புகாா் அளித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →