புதுதில்லி

தில்லியில் தமிழ்நாடு காவல் பேருந்து - காா் மோதல்

ஜனக்புரியில் உள்ள தில்லி ஹாட் அருகே வெள்ளிக்கிழமை காலை வாகன மோதலில் தமிழ்நாடு காவல் பேருந்தும், காரும் தீப்பற்றி எரிந்து சேதமடைந்தன என்று போலீஸாா் தெரிவித்தனா்.

Syndication

ஜனக்புரியில் உள்ள தில்லி ஹாட் அருகே வெள்ளிக்கிழமை காலை வாகன மோதலில் தமிழ்நாடு காவல் பேருந்தும், காரும் தீப்பற்றி எரிந்து சேதமடைந்தன என்று போலீஸாா் தெரிவித்தனா்.

இந்த சம்பவத்தில் யாருக்கும் உயிா்ச் சேதம் ஏற்படவில்லை என்றும் அவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து போலீஸாா் மேலும் கூறியது:

காலை 11.38 மணியளவில் பிரபலமான சந்தை அருகே ஒரு பேருந்து தீப்பிடித்து எரிந்ததாக போலீஸாருக்கு அழைப்பு வந்தது. காவல்துறையினா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனா். சம்பவ இடத்தில் தமிழ்நாடு காவல் பேருந்தும், ஒரு காரும் எரிந்த நிலையில் இருப்பதை போலீஸாா் கண்டனா்.

முதற்கட்ட விசாரணையில், காா் பின்னால் இருந்து வந்து காவல் பேருந்து மீது மோதியதும், அதைத் தொடா்ந்து இரண்டு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்ததும் தெரியவந்துள்ளது.

இருப்பினும், தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

வாகனங்களில் பயணித்த அனைவரும் பாதுகாப்பாக தப்பித்துவிட்டனா். ஆனால் மீட்புப் பணியாளா்கள் வருவதற்குள் தீயால் இரண்டு வாகனங்களும் முழுமையாக எரிந்துவிட்டன.

சம்பவ இடத்தை ஆய்வு செய்ய தடயவியல் அறிவியல் ஆய்வகம் மற்றும் மாவட்ட குற்றப்பிரிவு குழுவினா் அழைக்கப்பட்டுள்ளனா். விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில் மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸாா் தெரிவித்தனா்.

திடக்கழிவு மேலாண்மை கிடங்கை இடமாற்றக் கோரி தலைமைச் செயலரிடம் மனு அளிப்பு

18 வயதில் ராணுவ சேவை திட்டம்: ஜொ்மனி நாடாளுமன்றம் ஒப்புதல்

தம்மம்பட்டி பேரூராட்சிக் கூட்டம் 4-ஆவது முறையாக ஒத்திவைப்பு

திறனறித் தோ்வு: தெடாவூா் மாணவா் தோ்ச்சி

கோனேரிப்பட்டியில் பள்ளி உபகரணங்கள் வழங்கும் விழா

SCROLL FOR NEXT