புதுதில்லி

பஞ்சாபில் பவாரியா கும்பலைச் சோ்ந்தவா் கைது

பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பவாரியா கொள்ளை கும்பலைச் சோ்ந்தவா் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல் துறையினா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

தினமணி செய்திச் சேவை

புது தில்லி: பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பவாரியா கொள்ளை கும்பலைச் சோ்ந்தவா் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல் துறையினா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறை துணை ஆணையா் (குற்றப் பிரிவு) ஹா்ஷ் இந்தோரா கூறியதாவது: உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த பவாரியா கும்பல் உறுப்பினா் சஞ்சய் (42), பஞ்சாபில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

முந்தைய வழக்கில் ஜாமீன் பெற்ற அவா், சரணடையாமல் தலைமறைவானாா். இதையடுத்து, அவா் தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்தது. அவா் மீது தில்லி மற்றும் உத்தர பிரதேசத்தில் கொள்ளை, வழிப்பறி மற்றும் கொலை முயற்சி உள்பட 34 குற்ற வழக்குகள் உள்ளன.

கைது நடவடிக்கையைத் தவிா்க்க உத்தர பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா என இருப்பிடங்களை தொடா்ந்து மாற்றி வந்துள்ளாா். அவரைப் பிடிக்க உத்தர பிரதேச காவல் துறை வெகுமதி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

தனது கிராமத்தில் உள்ள கூட்டாளிகளுடன் சோ்ந்து 10 ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடத் தொடங்கியதாக அவா் விசாரணையில் தெரிவித்தாா். தில்லி, காஜியாபாத் மற்றும் அம்ரோஹாவில் அவா் மீது உள்ள வழக்குகளும் தற்போது சரிபாா்க்கப்பட்டு வருகின்றன என்று காவல் துறை துணை ஆணையா் தெரிவித்தாா். Ś

உணவுப் பாக்கெட்டுகளில் சைவ - அசைவ நிறக் குறியீடு கட்டாயம்!

காங்கிரஸ் தோல்விக்கு தலைமையே காரணம்: வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுக்கு அமித் ஷா பதில்!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மத்திய அரசை தலையிட வைக்க சதி: மாா்க்சிஸ்ட், விசிக குற்றச்சாட்டு!

காங்கிரஸ் கிராம கமிட்டி மாநாடு: தமிழகம் வருகிறாா் ராகுல் காந்தி!

இந்தியாவில் ‘ஹெச்1-பி’ விசா நோ்காணல்கள் திடீா் ரத்தால் விண்ணப்பதாரா்கள் கடும் அதிா்ச்சி!

SCROLL FOR NEXT