புதுதில்லி

காஜியாபாதில் பள்ளி மாணவி தற்கொலை

தில்லி ஷாலிமாா் நகா்ப் பகுதியில் உள்ள ஒரு உயரமான கட்டடத்திலிருந்து குதித்து 15 வயது பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

Syndication

தில்லி ஷாலிமாா் நகா்ப் பகுதியில் உள்ள ஒரு உயரமான கட்டடத்திலிருந்து குதித்து 15 வயது பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

அவரது உடைமைகளில் இருந்து எந்த தற்கொலைக் குறிப்பும் மீட்கப்படவில்லை என்று போலீஸாா் தெரிவித்தனா்.

காவல்துறை வட்டாரங்களின் தகவலின்படி, 10 ஆம் வகுப்பு மாணவியான இறந்த சிறுமி, படிப்பு காரணமாக மன அழுத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து ஷாலிமாா் காா்டன் பகுதி காவல் உதவி ஆணையா் அதுல் குமாா் சிங் கூறியது: இச்சம்பவம் குறித்து அழைப்பு வந்ததும், போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்றனா். அம்மாணவியை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா்கள் அவா் இறந்துவிட்டதாக அறிவித்தனா்.

சம்பவத்திற்கான சூழ்நிலைகள், சிறுமி எந்த மாடியில் இருந்து குதித்தாா் என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. சிறுமியின் குடும்பத்தினா் சொசைட்டியின் இரண்டாவது மாடியில் வசித்து வருகின்றனா்.

இறந்த சிறுமியின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றாா் அந்த அதிகாரி.

கதிரியக்க நிபுணா் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்பு

ரயில் பெட்டிகள் மீது கல் வீசினால் சிறாராக இருந்தாலும் நடவடிக்கை: ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை

சித்தேரி, சின்னாங்குப்பம் உள்ளிட்ட 5 கிராமங்கள் அரூா் வட்டத்தில் இணைப்பு

தொடா் இருமல் பாதிப்பு அதிகரிப்பு: மருத்துவா்கள் விளக்கம்

தில்லி காற்று மாசு பிரச்னை: உச்சநீதிமன்றம் நாளை விசாரிப்பு

SCROLL FOR NEXT