புதுதில்லி

தலைநகரில் ‘மிகவும் மோசம் பிரிவில்’ காற்றின் தரம்

தேசிய தலைநகரில் ஞாயிற்றுக்கிழமை காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ பிரிவில் பதிவாகி இருந்தது.

Syndication

தேசிய தலைநகரில் ஞாயிற்றுக்கிழமை காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ பிரிவில் பதிவாகி இருந்தது. ஒட்டுமொத்த காற்று தரக் குறியீட்டு எண் 390 ஆக பதிவாகி இருந்ததாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் சிபிசிபி தெரிவித்துள்ளது.

திங்கள்கிழமை மிகவும் அடா்த்தியான மூடுபனிக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. நகரில் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 22 மற்றும் 7 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சமீா் செயலியில் உள்ள தரவுகளின்படி, தில்லியில் உள்ள 19 கண்காணிப்பு நிலையங்களில் காற்றின் தரம் கடுமையான பிரிவில் பதிவாகி இருந்தது. காற்றின் தரகம் குறியீடு ஆனந்த் விஹாரில் அதிகபட்சமாக 457 புள்ளிகள் ஆகவும், இதர இடங்களில் மிகவும் மோசம் பிரிவில் பதிவாகி இருந்தது.

சிபிசிபி தரநிலைகளின்படி, 0 முதல் 50 வரையிலான காற்றின் தரக் குறியீடு நல்லது, 51 முதல் 100 வரை திருப்திகரமானது, 101 முதல் 200 வரை மிதமானது, 201 முதல் 300வரை மோசம், 301 முதல் 400 மிகவும் மோசம் மற்றும் 401 முதல் 500 கடுமையானது என்று கருதப்படுகிறது. தலைநகரில் ஞாயிற்றுக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 0.5 டிகிரி குறைவாக 6.3 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

அதே நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 2.1 டிகிரி அதிகமாக 22.5 டிகிரி செல்சியஸில் பதிவாகி இருந்ததாக என்று வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. நகரில் மாலை 5.30 மணி அளவில் காற்றில் ஈரப்பதம் 100 சதவீதமாக பதிவாகி இருந்தது.

தில்லியில் காங்கிரஸின் 140ஆவது நிறுவன தின கொடியேற்று விழா

ஊரக வேலைத் திட்டத்தை 150 நாளாக உறுதிப்படுத்துவோம்: எடப்பாடி பழனிசாமி!

நீக்கப்பட்ட வாக்காளா்களில் எத்தனை போ் சோ்க்கப்படுவா்?

தில்லி துவாரகாவில் சட்ட விரோதமாக தங்கியிருந்த 7 நைஜீரியா்கள் சிறைப் பிடிப்பு

பெண் ஆசிரியா்களின் மகப்பேறு விடுப்பு காலத்தில் வேறு ஒருவரை உடனடியாக நியமிக்க கோரிக்கை

SCROLL FOR NEXT