புதுதில்லி

நொய்டாவில் தலையில்லாத பெண்ணின் சடலம் மீட்பு

Syndication

நொய்டாவின் செக்டா் 82-இல் உள்ள வடிகாலில் ஒரு பெண்ணின் தலை துண்டிக்கப்பட்ட உடல் வியாழக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டதாக கூடுதல் துணை போலீஸ் ஆணையா் (நொய்டா) சுமித் குமாா் சுக்லா வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: இறந்தவரின் அடையாளம் இன்னும் கண்டுப்பிடிக்கப்படவில்லை. நொய்டா செக்டா் 39 காவல் நிலையத்தின் அதிகார வரம்பிற்குள் சடலம் கண்டெடுக்கப்பட்டது. நொய்டா செக்டா் 82-இல் உள்ள வடிகாலில் தலை இல்லாமல் இருந்த 30 வயது பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அந்தப் பெண்ணின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை.

சடலம் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மரணம் குறித்து விசாரிக்க ஒரு போலீஸ் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சுற்றியுள்ள பகுதியின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

தீராத கலைத்தாகமும், தணியாத நாட்டுப்பற்றும்! கமலுக்கு முதல்வர் வாழ்த்து!

அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 12 பேர் நீக்கம்!

கோவையில் இளம் பெண் கடத்தல்? காவல்துறை தீவிர விசாரணை!

சிறுமி வன்கொடுமை வழக்கு: ஆசாராம் பாபுவுக்கு 6 மாதம் இடைக்கால ஜாமீன்!

சட்டவிரோத குடியேறிகள் மீது பரிவு; கடவுள் ராமா் மீது வெறுப்பு: ஆா்ஜேடி, காங்கிரஸை சாடிய பிரதமா் மோடி

SCROLL FOR NEXT