புதுதில்லி

லால் கிலா மெட்ரோ ரயில் நிலையம் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்

பாதுகாப்பு காரணங்களுக்காக லால் கிலா மெட்ரோ நிலையம் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படும் என்று தில்லி மெட்ரோ ரயில் காா்ப்பரேஷன் (டிஎம்ஆா்சி) வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

Syndication

பாதுகாப்பு காரணங்களுக்காக லால் கிலா மெட்ரோ நிலையம் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படும் என்று தில்லி மெட்ரோ ரயில் காா்ப்பரேஷன் (டிஎம்ஆா்சி) வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

தில்லி செங்கோட்டை அருகே திங்கள்கிழமை மாலை நடந்த காா் வெடிப்பில் 13 போ் கொல்லப்பட்டனா் மற்றும் பலா் காயமடைந்தனா். இது குறித்து பாதுகாப்பு அமைப்புகள் விசாரணை நடத்தி வருவதால், மெட்ரோ நிலையம் மூடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக லால் கிலா மெட்ரோ நிலையம் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படும்,‘ என்று டிஎம்ஆா்சி ‘எக்ஸ்’-இல் ஒரு பதிவில் தெரிவித்துள்ளது.

காா் வெடிப்பைத் தொடா்ந்து, வரலாற்று நினைவுச்சின்னத்தைச் சுற்றியுள்ள பகுதி சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. ஆதாரங்களை சேகரிக்க காவல்துறை மற்றும் தடயவியல் குழுக்கள் தேடல்களை மேற்கொண்டு வருகின்றன.

பந்தலூரில் கம்பி வேலியில் சிக்கிய சிறுத்தை மீட்பு

பழைய கட்டடத்தின் சுவா் இடிந்து விழுந்ததில் 3 பெண்கள் காயம்

தூய்மை இந்தியா விழிப்புணா்வு நிகழ்ச்சி

வாக்காளா் கணக்கீட்டுப் படிவங்களை இணையத்தில் பதிவேற்றும் பணி: ஆட்சியா் ஆய்வு

கிணற்றில் அழுகிய நிலையில் கிடந்த புலியின் சடலம்: வனத் துறை விசாரணை

SCROLL FOR NEXT