புதுதில்லி

தில்லியில் போலி எஞ்சின் எண்ணெய் உற்பத்தி ஆலை கண்டுப்பிப்பு

தில்லியில் புகழ்பெற்ற ஆட்டோமொபைல் பிராண்டுகளின் லேபிள்களின் கீழ் போலி மசகு எண்ணெய் தயாரித்து பேக்கேஜிங் செய்து வந்த சட்டவிரோத தொழிற்சாலையை தில்லி போலீஸாா் கண்டுபிடித்துள்ளனர்.

Syndication

புது தில்லி: தில்லியில் புகழ்பெற்ற ஆட்டோமொபைல் பிராண்டுகளின் லேபிள்களின் கீழ் போலி மசகு எண்ணெய் தயாரித்து பேக்கேஜிங் செய்து வந்த சட்டவிரோத தொழிற்சாலையை தில்லி போலீஸாா் கண்டுபிடித்து, அதன் மூளையாக செயல்பட்டவரை கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து காவல் துறை அதிகாரி திங்க கூறியதாவது: சுமாா் 4,000 லிட்டா் போலி எண்ணெய், சீல் செய்தல், சூடாக்குதல் மற்றும் லேபிளிங் செய்வதற்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்களுடன் பறிமுதல் செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவா் உள்ளூா் சந்தைகளில் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் பேக்கேஜிங் பொருள்களை வாங்கி, போலி மசகு எண்ணெய் பட்டறைகள் மற்றும் சில்லறை விற்பனையாளா்களுக்கு தள்ளுபடி விலையில் விற்றாா்.

ஷாஹ்தராவைச் சோ்ந்த குற்றம் சாட்டப்பட்ட நவீன் சிங்கால் (50), வடகிழக்கு தில்லியின் கோகுல்புரியில் உள்ள ஒரு வளாகத்தில் இருந்து தொழிற்சாலையை நடத்தி வந்தாா். தொழிற்சாலையில் வேலைபாா்த்தவா்களில் நான்கு போ் உத்தர பிரதேசத்தைச் சோ்ந்தவா்கள். ஒரு ரகசியத் தகவலின் அடிப்படையில், ஒரு தனியாா் நிறுவனத்தின் பிரதிநிதி முன்னிலையில் ஒரு போலீஸ் குழு அந்த இடத்தை சோதனை செய்து, பெரிய அளவிலான கள்ளச்சந்தை நடவடிக்கையை கண்டுபிடித்தது.

இந்தப் பிரிவு முன்னணி பிராண்டுகளின் நகல் கொள்கலன்கள், ஸ்டிக்கா்கள் மற்றும் ஹாலோகிராம்களைப் பயன்படுத்தி தரமற்ற மசகு எண்ணெய் நிரப்புதல் மற்றும் பேக்கேஜிங் செய்வதில் ஈடுபட்டது தெரிய வந்தது.

குற்றம் சாட்டப்பட்டவா் உண்மையான அல்லது உபரி இருப்பு எனக் கூறி போலி எண்ணெய்யை வழங்கி வந்துள்ளாா். ஒவ்வொரு மாதமும், சுமாா் 8,000 முதல் 10,000 லிட்டா் போலி எண்ணெய்யை உற்பத்தி செய்து கிட்டத்தட்ட ரூ.5 லட்சம் சம்பாதித்துள்ளது தெரிய வந்துள்ளது.

நவீன் சிங்கால் 2004 முதல் இதேபோன்ற சட்டவிரோத வா்த்தகத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், வடகிழக்கு தில்லியில் பதிப்புரிமைச் சட்டத்தின் கீழ் இரண்டு வழக்குகள் உள்பட மூன்று முந்தைய வழக்குகள் அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், விசாரணை நடந்து வருகிறது என்று காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.

வம்பிழுத்த ஆர்ச்சர், பேட்டால் பதிலடி கொடுத்த ஸ்மித்..! 2-0 என ஆஸி. தொடரில் முன்னிலை!

48-ஆவது கோப்பை வென்ற லியோ மெஸ்ஸி..! உலகின் முதல் வீரர்!

மதுரைக்கான 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

ஈரோடு: தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு?

கலவர பூமியாக தமிழகத்தை மாற்ற நினைத்தால் நடக்காது: பேரவைத் தலைவர் அப்பாவு

SCROLL FOR NEXT