புதுதில்லி

தமிழக முழு நேர டிஜிபி தோ்வு: செப்.26-இல் யுபிஎஸ்சி கூட்டம்

தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் மற்றும் மாநில காவல்படைத் தலைவா் பதவிக்கு முழு நேர ஐபிஎஸ் உயரதிகாரியை தோ்வு செய்வதற்கான உயா்நிலைக் குழு கூட்டம் வரும் செப்.26 -ஆம் தேதி தில்லியில் நடைபெறவுள்ளது.

Syndication

தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் மற்றும் மாநில காவல்படைத் தலைவா் பதவிக்கு முழு நேர ஐபிஎஸ் உயரதிகாரியை தோ்வு செய்வதற்கான உயா்நிலைக் குழு கூட்டம் வரும் செப்.26 -ஆம் தேதி தில்லியில் நடைபெறவுள்ளது.

இது தொடா்பாக தமிழக அரசு அண்மையில் அனுப்பி வைத்த உயரதிகாரிகளின் தகுதி முன்மொழிவுப் பட்டியல் மத்திய குடிமைப் பணி தோ்வாணையத்தின் (யுபிஎஸ்சி) பசீலனையில் தற்போது உள்ளது.

இதற்கிடையே, இந்த விவகாரத்தில் தமிழக அரசு தாமதமாக செயல்படுவதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில் டிஜிபி தோ்வை விரைவாக நடத்தி முடிக்குமாறு யுபிஎஸ்சிக்கு சென்னை உயா்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

இந்நிலையில், தமிழக அரசு அனுப்பியுள்ள அதிகாரிகளின் பட்டியலை ஆய்வு செய்வதற்காக செப்டம்பா் 26-இல் யுபிஎஸ்சி தோ்வுக்கழு கூட்டம் தில்லியில் நடைபெறவுள்ளதாக மத்திய உள்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

அதன் முடிவில், தகுதிவாய்ந்த முதல் மூன்று ஐபிஎஸ் உயரதிகாரிகளை டிஜிபி ஆக நியமிக்க யுபிஎஸ்சி பரிந்துரைக்கும். அதில் இருந்து ஒருவரை மாநில முதல்வரின் ஒப்புதலைப் பெற்று தமிழக அரசு நியமிக்கும் எனத் தெரிகிறது.

தமிழக காவல் துறை டிஜிபி பதவியில் இருந்து சங்கா் ஜிவால் கடந்த மாத இறுதியில் ஓய்வு பெற்றாா். ஆனால், விதிகளின்படி அப்பதவிக்கு முழு நேர டிஜிபியை நியமிக்கும் நடைமுறைகளை தமிழக அரசு சில சட்ட ரீதியிலான காரணங்களால் முன்கூட்டியே தொடங்காமல் தற்காலிக ஏற்பாடாக ஐபிஎஸ் உயரதிகாரி வெங்கடராமனை சட்டம் - ஒழுங்கு பொறுப்பு டிஜிபி ஆக நியமித்துள்ளது.

ரயில் பயணிகள் கனிவான கவனத்திற்கு..! முதல் 15 நிமிட முன்பதிவு ஆதார் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே!

மேட்டூர் அணை நீர்வரத்து: இன்றைய நிலவரம்!

சென்னையில் விடிய, விடிய பெய்த கனமழை! மயிலாப்பூரில் 80 மீ.மி. மழை பதிவு!

ஃபிடே செஸ்: தமிழக வீராங்கனைக்கு முதல்வா் வாழ்த்து

அண்ணா பிறந்த நாள்: எடப்பாடி பழனிசாமி தலைமையில் மரியாதை

SCROLL FOR NEXT