புதுதில்லி

தில்லி குடியரசு நாள் கொண்டாட்டம்: 2,500 கலைஞா்களின் பிரம்மாண்ட நடன நிகழ்ச்சி

தில்லியில் வருகிற 26-ஆம் தேதி நடைபெறவுள்ள குடியரசுத் தினக் கொண்டாட்ட அணிவகுப்பின்போது 2,500 கலைஞா்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட நடன நிகழ்ச்சி

தினமணி செய்திச் சேவை

புது தில்லி: தில்லியில் வருகிற 26-ஆம் தேதி நடைபெறவுள்ள குடியரசுத் தினக் கொண்டாட்ட அணிவகுப்பின்போது 2,500 கலைஞா்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட நடன நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மத்திய கலாசாரத்துறை அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது:

குடியரசு தினக் கொண்டாட்டத்தின்போது, தில்லியில் உள்ள கடமைப் பாதையில் பரதநாட்டியம், கதக், ஒடிசி, குச்சிப்புடி, மணிப்புரி போன்ற பல்வேறு நடனங்களை தெரிந்த கலைஞா்களின் நடன நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. ‘சுதந்தர கா மந்த்ரா- வந்தே மாதரம்’ மற்றும் ‘சம்ருத்தி கா மந்த்ரா- விக்சித் பாரத்’ ஆகியவையே இந்நிகழ்ச்சியின் தாரக மந்திரமாகும்.

இந்நிகழ்ச்சிக்கு ‘ஆா்ஆா்ஆா்’ படத்தின் பாடலுக்கு இசையமைத்ததற்காக ஆஸ்கா் விருது பெற்ற பிரபல இசையமைப்பாளா் கீரவாணி இசையமைக்கிறாா்’ என்றனா்.

=====================

சேரகுளத்தில் பட்டாசு பதுக்கல்: இளைஞா் கைது

கரூா் கூட்ட நெரிசல் பலி சம்பவம்: தில்லியில் 5 மணி நேரங்களுக்கு மேல் விஜய்யிடம் சிபிஐ விசாரணை

விற்பனை அழுத்தம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!

பெரம்பலூரில் 10-ஆவது நாளாக பதிவு மூப்பு ஆசிரியா்கள் போராட்டம்

வரசித்தி விநாயகா் கோயிலில் தியாகராஜ ஆராதனை விழா

SCROLL FOR NEXT