முகப்பு
நூல் அரங்கம்

புலவர் வே. பதுமனார் தம் மாணாக்கர் கற்றதும் பெற்றதும்

மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த 68 மாணவர்களின் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:15 AM
பகிர்:

புலவர் வே. பதுமனார் தம் மாணாக்கர் கற்றதும் பெற்றதும்; பக்.200; விலை குறிப்பிடவில்லை; புலவர் வே. பதுமனார் 90-ஆம் பிறந்த நாள் பெருமங்கலம் பதுமராக விழாக் குழு, குடியேற்றம் - 632602; ✆ 993490703.

தமிழில் ஓர் ஆசிரியரை நினைவுகூர்ந்து மாணவர்களால் எழுதப் பெற்ற கட்டுரைகளைக் கொண்ட இந்த வகையிலான தொகுப்பு நூலொன்று வெளிவருவது அனேகமாக இதுவே முதலாவதாக இருக்கலாம்.

குடியேற்றத்தில் திருவள்ளுவர் மேனிலைப் பள்ளியில் பணியாற்றி ஓய்வுபெற்று தற்போது 90-ஆவது பிறந்த நாள் கொண்டாடிய ஆசிரியர் புலவர் வே. பதுமனார் பற்றிய அவருடைய மாணாக்கர்களின் நினைவுகளைக் கட்டுரைகளாகத் தொகுத்து நூலாக்கியுள்ளனர்.

40, 50 ஆண்டுகளுக்கு முன் பதுமனாரிடம் பயின்றவர்கள் எல்லாரும் இன்னமும்கூட அவருடன் தொடர்பில் இருப்பதும், அன்றைய நிகழ்வுகளைப் பகிர்ந்து நெக்குருகுவதும் இன்றைய தலைமுறையை வியப்பில் ஆழ்த்தக் கூடியவையாகும்.

மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த 68 மாணவர்களின் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. பதுமனாரிடம் கற்றதும் பெற்றதும் பற்றி மாணவர்கள் குறிப்பிடுகிற ஒவ்வொன்றும் ஆசிரியர் என்பவர் எவ்வாறு இருக்க வேண்டும் என்கிற மேன்மையைச் சுட்டுகின்றன.

எரிதழல் என்ன தொகை என இலக்கண வகுப்பை நினைவுகூர்கிறார் ஒருவர். என் தமிழுக்கு அவரே காரணம்; தமிழுக்கான முதல் வித்தை ஊன்றி வித்தையையும் கற்றுத் தந்தவர் என்கிறார் இன்னொருவர். 7 மதிப்பெண்களை 70 ஆக மாற்றிக் காட்டியதை ஒருவர் குறிப்பிட, ஆசிரியரின் தனிப்பயிற்சி வகுப்புகளின் சிறப்புகளைப் பலரும் சிறப்பிக்கின்றனர். இவ்வாறு ஏராளமான விஷயங்கள்.

சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரையில் ஆசிரியர் - மாணவர்கள் உறவு என்பது எந்த அளவுக்கு நெருக்கமாகவும் உயிர்ப்புள்ளதாகவும் இருந்திருக்கிறது என்பதை இன்றைய மாணவர்களும் இளைஞர்களும், ஏன் ஆசிரியர்களும்கூட, உணர்ந்துகொள்ளவும் அறிந்துகொள்ளவும் வாசிக்கப்பட வேண்டிய 'பாட' நூல்.

முழு கட்டுரையைப் படிக்க →