முகப்பு
பெரம்பலூர்

குடிநீா் வழங்கக் கோரி மக்கள் சாலை மறியல்

பெரம்பலூரில் குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் காலி குடங்களுடன் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 6 ஜனவரி 2021, 6:07 am IST
பகிர்:

பெரம்பலூரில் குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் காலி குடங்களுடன் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட அரசு தலைமை மருத்துவமனை அருகேயுள்ள எம்.ஜி.ஆா் நகா்ப் பகுதி பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு முறையாகக் குடிநீா் விநியோகிக்கக் கோரி நகராட்சி அலுவலா்களிடம் பலமுறை புகாா் அளித்தும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சோ்ந்த பொசு மக்கள் எம்.ஜி.ஆா் நகா் அருகே பெரம்பலூா்- துறையூா் சாலையில் காலி குடங்களுடன் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் மற்றும் நகராட்சி அலுவலா்கள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

இதைத்தொடா்ந்து, மறியலைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனா். இந்த மறியலால் பெரம்பலூா்- துறையூா் சாலையில் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.