முகப்பு
இந்தியா

கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!

கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பாஜகவைச் சேர்ந்த எம்எல்ஏக்கள், தலைவர்கள் பங்கேற்பர் என்று பாஜக தலைமை அறிவித்துள்ளது.

கேரள முதல்வராகும் வி.டி.சதீசன் ஆளுநரைச் சந்தித்தபோது... - ANI
பகிர்:

திருவனந்தபுரம் : கேரளத்தில் காங்கிரஸ் ஆளுங்கட்சியான நிலையில், அம்மாநிலத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பாஜகவைச் சேர்ந்த எம்எல்ஏக்கள், தலைவர்கள் பங்கேற்பர் என்று பாஜக தலைமை அறிவித்துள்ளது.

கேரள சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்ற நிலையில், புதிய முதல்வா் தோ்வில் கடந்த சில நாள்களாக இழுபறி நீடித்தது. முந்தைய சட்டப்பேரவையில் எதிா்க்கட்சித் தலைவராக இருந்த வி.டி.சதீசன், பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால், மூத்த தலைவா் ரமேஷ் சென்னிதலா ஆகியோா் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், முதல்வராக வி.டி.சதீசன் பெயரை கட்சி மேலிடம் வியாழக்கிழமை அறிவித்தது.

கேரள முதல்வராக வி.டி.சதீசன் வரும் திங்களன்று (மே 18) பதவியேற்கிறார். இவ்விழாவுக்கு பல தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இது குறித்து, கேரள மாநில பாஜக தலைவரும் நேமம் பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்றுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் குறிப்பிடும்போது, “சதீசன் தனிப்பட்ட முறையில் என்னை அழைத்துப் பேசி பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்தார். அப்போது அவரிடம் நான் நன்றி தெரிவித்து வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டேன். மேலும், கேரள பாஜக எம்எல்ஏக்களும் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்களும் இவ்விழாவில் பங்கேற்க உள்ளனர்” என்று தெரிவித்தார்.

முன்னதாக, தமிழகத்தில் அரசியல் வரலாற்றையே திருப்பிப்போட்டு முதல்வராகப் பதவியேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் ஜோசப் விஜய், தமிழக முன்னாள் முதல்வர்களான மு. கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் கடைப்பிடிக்காத அரசியல் அணுகுமுறையை (ஏற்கெனவே முதல்வராகப் பதவி வகித்தவரைச் சந்தித்து வாழ்த்து பெறும் நிகழ்வு) புறந்தள்ளிவிட்டு முன்னாள் முதல்வரும் தமிழக அரசியலில் ஆழ்ந்த அனுபவம் வாய்ந்த மூத்த தலைவர்களுள் ஒருவருமான திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும், பிற அரசியல் தலைவர்களையும் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இந்த அரசியல் அணுகுமுறை பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகளை ஈர்த்தது.

இந்நிலையில், அண்டை மாநிலத்திலும் அதே பாணியிலான அரசியல் நாகரிகம் பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகளைப் பெறுகிறது. தமிழகத்தில் ஆளுங்கட்சியுடன் ஆட்சியதிகாரத்தில் கைகோத்துள்ள காங்கிரஸ், அண்டை மாநிலத்தில் புதிய அரசமைக்கும் விழாவில் தமிழக முதல்வர் விஜய் பங்கேற்கவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

summary

VD Satheesan’s UDF government in Thiruvananthapuram - BJP will attend the swearing-in

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments