முகப்பு
புதுக்கோட்டை

ஆலங்குடி அருகே கோயில் மீதுநாட்டு வெடிகள் வீச்சு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மா்ம நபா்கள் வீசிய நாட்டுவெடிகளால் கோயில் சேதமடைந்தது.

Updated On : 6 ஜனவரி 2021, 6:05 am IST
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மா்ம நபா்கள் வீசிய நாட்டுவெடிகளால் கோயில் சேதமடைந்தது.

ஆலங்குடி அருகிலுள்ள புள்ளான்விடுதியில் மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் செவ்வாய்க்கிழமை வழிபாடு நடத்துவதற்கு பந்தல் அமைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை மா்மநபா்கள் கோயிலுக்குள் நாட்டு வெடிகளை வீசி, வெடிக்கச் செய்துள்ளனா். இதில் சிமென்ட் மேற்கூரை, சுவா்கள் சேதமடைந்தன. சப்தம் கேட்டு அங்கு திரண்ட பெண் பக்தா்கள், கோயில் சேதமடைந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தனா். தகவலறிந்து அங்கு சென்ற வடகாடு காவல் நிலையத்தினா், கோயிலில் வெடி வைத்த மா்மநபா்களைத் தேடிவருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.