முகப்பு
செய்திகள்

சீரங்கத்தம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

மானாம்பதி சீரங்கத்தம்மன் கோயிலில் 9ஆம் ஆண்டு சித்திரைப் பெருவிழாயொட்டி ஞாயிற்றுக்கிழமை திருவிளக்கு பூஜை நடைபெற்றது. 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
சீரங்கத்தம்மன் கோயிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் கலந்துகொண்ட பெண்கள்.
பகிர்:

மானாம்பதி சீரங்கத்தம்மன் கோயிலில் 9ஆம் ஆண்டு சித்திரைப் பெருவிழாயொட்டி ஞாயிற்றுக்கிழமை திருவிளக்கு பூஜை நடைபெற்றது. 
திருப்போரூரை அடுத்த மானாம்பதி கிராமத்தில் சீரங்கத்தம்மன் கோயில் உள்ளது. இங்கும், செல்லியம்மன், கரைமேலழகி கோயிலிலும் 9ஆம் ஆண்டு சித்திரைப் பெருவிழா நடைபெற்றது. இதையொட்டி, சென்னை மேற்கு மாம்பலம் முருகாசிரம சுவாமி சங்கரானந்தா அருளாசியுடன் ஞாயிற்றுக்கிழமை காலை மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரமும் மகா தீப ஆராதனையும் நடைபெற்றன. நண்பகல் 12 மணிக்கு திருக்கழுகுன்றம் ராமச்சந்திரன் சிவாச்சாரியார் தலைமையில் சீரங்கத்தம்மன் உற்சவருக்கு மகா அபிஷேகம், மகா தீப ஆராதனை, அலங்காரம் ஆகியவை நடைபெற்றன. அதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது. 
மாலை 3 மணிக்கு அம்மன் சிரசில் மணிநாகம், சிங்காரத் திலகம், உடுக்கையுடன் அம்மனைத் தோளில் சுமந்து ஆலயத்தின் உள்ளே வலம் வருதல், அம்மன் பூ ஊஞ்சலில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தல், சென்னை மயிலை வெங்கடேச குருக்கள் தலைமையில் திருவிளக்கு பூஜை ஆகியவை 
நடைபெற்றன. 
அதன் பின், சித்ரா பெளர்ணமி பூஜையின் நிறைவாக சந்திரனுக்கு தீப ஆராதனை காட்டப்பட்டது. ஜோதி தரிசனமும் நடைபெற்றது.
இந்த விழாவையொட்டி கோயிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் மானாம்பதி, திருப்போரூர் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். குடும்ப சுபிட்சம் வேண்டியும், நாடு செழிப்புடன் இருப்பதற்காக மழை வேண்டியும், தீய சக்திகள் அழிந்து மக்களை நல்வழிப்படுத்தவும் அம்மனை வேண்டி இந்த பூஜை நடைபெற்றது.
சித்திரைப் பெருவிழாவிற்கான ஏற்பாடுகளை சென்னை ராயப்பேட்டை சீரங்கத்தம்மன் அறக்கட்டளை நிர்வாகிகள் வி.குமார் செட்டியார், ஆர்.காளிதாஸ், பி.எல்.சரவணன், மணிமேகலை மற்றும் மானாம்பதி கிராம மக்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர். 

முழு கட்டுரையைப் படிக்க →