செய்திகள்

கோயில் பிராகாரத்தை எத்தனை முறை சுற்றினால் என்ன பலன் தெரியுமா?

கோயிலுக்குச் சென்று கருவறையில் உள்ள கடவுளை வணங்கிய பின்னர் கோயில் பிராகாரத்தை சுற்றி வருவது வழக்கம். 

தினமணி

கோயிலுக்குச் சென்று கருவறையில் உள்ள கடவுளை வணங்கிய பின்னர் கோயில் பிராகாரத்தை சுற்றி வருவது வழக்கம். 

எல்லோரும் மூன்று முறை தானே சுற்றுகின்றனர். நாமும் 3 முறை சுற்றினால் போதும் என்று நினைத்துச் சுற்றி வருதல் கூடாது. கோயில் பிராகாரத்தை எத்தனை முறை சுற்றினால் என்ன பலன் என்ற முழு விவரத்தை சரியாக நாம் தெரிந்துகொண்டு சுற்றி வருவது அவசியம்.  வாங்கப் பார்க்கலாம். 

கோயில் பிராகாரத்தை சுற்றுவதின் பலன்கள் 

•  ஒரு முறை கோயில் பிராகாரத்தை வலம் வந்தால் இறைவனை அணுகுதல் என்று பொருள்.

• மூன்று முறை வலம் வந்தால் மனச்சுமை குறையும்.

• ஐந்து முறை சுற்றி வந்தால் இஷ்டசித்தி கிடைக்கும்.

• ஏழு முறை வலம் வந்தால் நினைத்த காரியம் ஜெயமாகும். 

• ஒன்பது முறை வலம் வருவதால் (சத்துருநாசம்) எதிரிகள் விலகுவர்.

• பதினொரு முறை சுற்றினால் ஆயுள் விருத்தியாகும்.

• பதிமூன்று முறை வலம் வந்தால் வேண்டுதல்கள் சித்தியாகும். 

• பதினைந்து முறை வலம் வந்தால் தன ப்ராப்தி உண்டாகும். 

• பதினேழு முறை வலம் வருவதால் தானியம் சேரும். விவசாயம் செழிக்கும். 

• பத்தொன்பது முறை சுற்றி வலம் வந்தால் ரோகம் நிவர்த்தியாகும். 

• இருபத்தொரு முறை வலம் வந்தால் கல்வி விருத்தியாகும்.

• இருபத்தி மூன்று முறை சுற்றினால் சுக சௌகர்யத்துடன் வாழ்வு கிட்டும்.

• நூற்றுயெட்டு முறை வலம் வந்தால் புத்திரபேறு கிடைக்கும்.

• இருநூற்று எட்டு முறை சுற்றினால் யாகம் செய்த பலன் கிடைக்கும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள் - மீனம்

வார பலன்கள் - கும்பம்

வார பலன்கள் - மகரம்

வார பலன்கள் - தனுசு

வார பலன்கள் - விருச்சிகம்

SCROLL FOR NEXT