முகப்பு
செய்திகள்

பக்தி பரவசத்துடன் 2-வது நாளாக அத்தி வரதரைத் தரிசிக்க குவியும் பக்தர்கள்!

40 ஆண்டுகளுக்குப் பின் காட்சிதரும் ஆதி அத்திவரதரை தரிசிக்கத் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். 

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:24 AM
பகிர்:

40 ஆண்டுகளுக்குப் பின் காட்சிதரும் ஆதி அத்திவரதரை தரிசிக்கத் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். 

காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜப் பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் காட்சிதருவார். இந்த அரிய நிகழ்வு நேற்று தொடங்கியது. ஆகஸ்ட் 17-ம் தேதி வரை தொடர்ந்து 48 நாட்கள் அத்தி வரதர் பெருவிழா நடைபெறவுள்ளது. 

இப்பெருவிழாவில் கலந்துகொண்டு அத்திவரதரை தரிசனம் செய்ய நாடு முழுவதும் இருந்து திரளான பக்தர்கள் காஞ்சிபுரம் வருகை தந்தவாறு உள்ளனர். 

நேற்று ஒரு நாள் மட்டுமே சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அத்தி வரதரைப் பக்தி பரவசத்துடன் கோவிந்தா, பெருமாளே, நாராயணா எனக்கூறி தரிசனம் செய்து மகிழ்ந்தனர். 

தொடர்ந்து இரண்டாவது நாட்களாக இன்றும் திரளான பக்தர்கள் அத்திவரதரை காணக் குவிந்தவண்ணம் உள்ளனர். நேற்றைய விட இன்று எந்த இடையூறும் இன்றி அத்திவரதரை தரிசிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →