செய்திகள்

அத்திவரதரை கடந்த 7 நாட்களில் 6 லட்சம் பேர் தரிசனம்!

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சிதரும் அபூர்வ அத்தி வரதரை கடந்த 7 நாட்களில் 6.16 லட்சம்..

தினமணி

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சிதரும் அபூர்வ அத்தி வரதரை கடந்த 7 நாட்களில் 6.16 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜப் பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் பெருவிழா கடந்த 1-ம் தேதி தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து, ஆகஸ்ட் 17-ஆம் தேதி வரை 48 நாள்களுக்கு நடைபெறவுள்ளது.

கடந்த 7 நாள்களில் இதுவரை சுமார் 6.16 லட்சம் பேருக்கு மேல் தரிசனம் செய்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமையான நேற்று வார விடுமுறை நாள் என்பதால் அதிகாலை 3 மணியிலிருந்து திரளானோர் காஞ்சிபுரம் வருகை புரிந்தனர்.

 ஜூலை 1-ஆம் தேதி முதல்  அத்திவரதரை தரிசித்த பக்தர்கள் எண்ணிக்கை

 ஜூலை 1-ஆம் தேதி: 1 லட்சம்

 ஜூலை 2-ஆம் தேதி: 70 ஆயிரம்

 ஜூலை 3-ஆம் தேதி: 75 ஆயிரம்

 ஜூலை 4-ஆம் தேதி: 45 ஆயிரம்

 ஜூலை 5-ஆம் தேதி: 85 ஆயிரம்

 ஜூலை 6-ஆம் தேதி: 1.16 லட்சம்

 ஜூலை 7-ஆம் தேதி: 1.25 லட்சம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் இந்தியா சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்!

2-வது ஒருநாள்: இருவர் அரைசதம்; இங்கிலாந்துக்கு 331 ரன்கள் இலக்கு!

உயர்கல்வியில் சிறந்த தமிழ்நாடு: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

2025-ல் மட்டும் 600-க்கும் அதிகமான பயங்கரவாதத் தாக்குதல்கள்! எங்கு தெரியுமா?

இந்தியாவுடனான நல்லுறவை டிரம்ப்பின் ஈகோ அழிக்கிறது? வரிவிதிப்புக்கு அமெரிக்க காங்கிரஸ் எதிர்ப்பு!

SCROLL FOR NEXT