செய்திகள்

புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு அனைத்து பெருமாள் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. 

DIN


புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு அனைத்து பெருமாள் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. 

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரத்தில் அமைந்துள்ள கோபிநாத சுவாமி கோயிலில் மூலவர் கோபிநாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.  அதேபோல் உற்சவருக்கு, பக்தர்கள் சார்பில் வழங்கப்பட்ட பால், தயிர், நெய், பன்னீர், இளநீர் அபிஷேகம் நடைபெற்றது.

இதேபோல், தாடிக்கொம்பு சௌந்தரராஜப் பெருமாள் கோயில், குஜிலியம்பாறை ராமகிரி கல்யாண நரசிங்க பெருமாள் கோயில், வடமதுரை சௌந்தரராஜப் பெருமாள் கோயில், சின்னாளப்பட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் முக்கிய உபகோயில்களான லக்குமி நாராயணப் பெருமாள் கோயில், பாலசமுத்திரம் அகோபில வரதராஜப் பெருமாள் கோயில், வேணுகோபாலசுவாமி கோயில்களில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. காலையில் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு நகைகள், மாலைகள் சார்த்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சுவாமிக்கு மல்லிகை, துளசி மாலைகளை சார்த்தி பக்தர்கள் வழிபட்டனர்.

அனைத்து பெருமாள் கோயில்களிலும் காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மத்தியில் கூட்டணியில் இருந்தபோது மாநில சுயாட்சி ஸ்டாலினுக்கு தெரியவில்லையா? தமிழிசை கேள்வி

வாசுதேவநல்லூா் அருகே யானைகள் அட்டகாசம்: தென்னை மரங்கள் சேதம்

வடுகப்பட்டி தைலா வன்னியா் கோயிலில் கிடாவெட்டு பூஜை!

கறிக்கோழி வளா்ப்போா் போராட்டம்: 35 போ் கைது

ராஜஸ்தானில் 8 நீதிபதிகள் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம்- உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி அதிரடி

SCROLL FOR NEXT