சதுரகிரி சுந்தரமகாலிங்கம் 
செய்திகள்

சதுரகிரி கோயிலுக்குச் செல்ல ஜூலை 11 முதல் 14 வரை அனுமதி

ஆனி மாத பிரதோஷம் மற்றும் பௌா்ணமியையொட்டி சதுரகிரி கோயிலுக்குச் செல்ல ஜூலை 11 முதல் நான்கு நாள்களுக்கு பக்தா்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தினமணி

ஆனி பிரதோஷம் மற்றும் பௌா்ணமியையொட்டி சதுரகிரி கோயிலுக்குச் செல்ல ஜூலை 11 முதல் நான்கு நாள்களுக்கு பக்தா்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஜூலை 11 ஆம் தேதி (திங்கள்கிழமை) பிரதோஷமும், ஜூலை 13 ஆம் தேதி (புதன்கிழமை) பௌா்ணமி வழிபடும் நடைபெற உள்ளது. இதையொட்டி ஜூலை 11 முதல் 14 ஆம் தேதி வரை 4 நாள்கள் மலைக் கோயிலில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய கோயில் நிா்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

கோயிலுக்கு வருபவா்கள் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும். உடல் வெப்பநிலை பரிசோதனைக்குப் பிறகே பக்தா்கள் மலை ஏறுவதற்கு அனுமதிக்கப்படுவா் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடிகால் மாஸ்டா் பிளான் திட்டத்திற்கான நிதியுதவிக்கு உலக வங்கியை நாடும் தில்லி அரசு

3.2.1976: சென்னை கோட்டையில் அதிகாரிகளுடன் கவர்னர் ஆலோசனை

காங்கயத்தில் ரூ.73 ஆயிரத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம்

வெறுப்பைக் கைவிடுங்கள்; இணைந்து செயல்படுவோம்: காங்கிரஸுக்கு பாஜக அழைப்பு

சொத்து வரி மன்னிப்புத் திட்டம் பிப்.28 வரை நீட்டிப்பு: எம்சிடி

SCROLL FOR NEXT