செய்திகள்

கோவை:  மணியகாரம்பாளையம் காலபைரவர் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா

கோவை, மணியகாரம்பாளையம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற அமிர்த கலசர் விநாயகர் கோயில் வளாகத்தில் உள்ள காலபைரவர் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

தினமணி

கோவை, மணியகாரம்பாளையம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற அமிர்த கலசர் விநாயகர் கோயில் வளாகத்தில் உள்ள காலபைரவர் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

கோவையை அடுத்த மணியகாரம்பாளையம் பகுதியில் அமைந்துள்ளது அமிர்த கலச விநாயகர் கோவில். பிரசித்தி பெற்ற இக்கோவில் வளாகத்தில் அந்த பகுதி மக்களின் நீண்ட நாள் வேண்டுதலின் படி, காலபைரவர் கோயில் கட்டபட்டு, கருவறை, கால பைரவர் சிலை விமானம் அமைத்து, வர்ணம் பூசி, பணிகள் செய்யப்பட்டது.

இந்நிலையில் திருப்பணிகள் நிறைவடைந்து காலபைரவர் கோயில் மகா கும்பாபிஷேக விழா கவுமார  மடாலயம் சிரவை ஆதினம் தவத்திரு.இராமானந்த குமரகுருபர சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது. மங்கல இசை, திருப்பள்ளி எழுச்சியுடன், மூர்த்திகளுக்கு ஆனந்து கட்டி காப்பணிவித்தல் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து காலபைரவருக்கு இரண்டாம் கால வேள்வி 108 வகை காய், கனி, மூலிகை பொருள்களை கொண்டு மகா யாகம் நடைபெற்றது. பின்னர் ஞானத்திரு உலா எனும் திருக்குடங்கள் கோயிலை வலம் வந்து, திருக்குட நன்னீராட்டு பெரு விழா நடைபெற்றது.

தொடர்ந்து கால பைரவர் விமானம் உள்பட மும்மூர்த்தி கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து மகா அபிஷேகம் மற்றும் அன்னதானம் நடைபெற்றது. இதில் கோவை உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரிய மனு விசாரணை ஒத்திவைப்பு

ஊக்குவிப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும்: அன்புமணி

ஆவணங்கள் இல்லாததால் 14 ஆயிரம் கிலோ நெல் விதைகள் விற்கத் தடை

ஜவ்வாது மலை மக்களுக்கு அரசின் திட்டங்கள் சென்று சேர கூடுதல் கவனம்: மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ்

காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சட்டக் கல்லூரி மாணவா்கள் போராட்டம்

SCROLL FOR NEXT