திருப்பதி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான இன்று சிம்ம வாகனத்தில் மலையப்பசுவாமி எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 27-ஆம் தேதி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவத்தின் முதல் நாளில் பெரிய சேஷ வாகனத்திலும், இரண்டாவது நாளில் சின்னசேஷ வாகனத்திலும், அன்றிரவு அன்னப்பறவை வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மூன்றாவது நாளான இன்று காலை சிம்ம வாகனத்தில் மலையப்பசுவாமி யோக நரசிம்மர் அலங்காரத்தில் நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இன்றிரவு முத்து பந்தல் வாகனத்தில் மலையப்பசுவாமி தயார்களுடன் பக்தர்களுக்கு நான்கு மாட வீதிகளிலும் அருள்பாலிக்க உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.