முகப்பு
செய்திகள்

மே 30ல் பழநி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை நிறுத்தம்!

பழநி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை நிறுத்தப்படும் தேதி அறிவிப்பு...

Updated On : 28 மே, 2024 at 10:24 AM
பகிர்:

பழநி முருகன் கோயிலில் மே 30ல் ரோப் கார் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், ரோப்கார் சேவை பராமரிப்பு பணி காரணமாக தினமும் 1 மணி நேரமும், மாதத்துக்கு ஒரு நாளும், ஆண்டுக்கு ஒரு மாதமும் நிறுத்தப்படுவது வழக்கம். அதன்படி மே 30-ம் தேதி ரோப்கார் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

இதையொட்டி ரோப்கார் சேவை அன்று ஒரு நாள் மட்டும் நிறுத்தப்படுகிறது. எனவே பக்தர்கள் மின் இழுவை ரயில், படிப்பாளியைப் பயன்படுத்தி மலைக்கோயிலுக்குச் செல்லுமாறு கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →