பத்தனம்திட்டா : சபரிமலை மண்டல பூஜை கால்த்தில் வருவாய் ரூ. 332 கோடியைக் கடந்தது. நிகழாண்டு மண்டல பூஜையில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை மற்றும் இதர வருவாய் மூலம் சபரிமலை தேவஸ்தானத்துக்கு கடந்த வெள்ளிக்கிழமை(டிச. 27) மாலை நிலவரப்படி, ரூ. 332.77 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது, கடந்தாண்டு மண்டல பூஜை காலத்தில் பெறப்பட்ட வருவாய் ரூ. 297.06 கோடியைவிட ரூ. 35 லட்சத்துக்கும் மேல் கூடுதலாகும். 2025-ஆம் ஆண்டு மண்டல பூஜை காலத்தில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வருகை தந்த பக்தர்கள் எண்ணிக்கை 30.56 லட்சத்தைக் கடந்திருப்பதாக திருவிதாங்கூர் தேவஸ்தான வாரிய (டிடிபி) தலைவர் கே. ஜெயகுமார் தெரிவித்தார்.
முன்னதாக, சுவாமி ஐயப்பனுக்கு வெள்ளிக்கிழமை புனிதமான தங்க அங்கி அணிவிக்கப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. சபரிமலையில் முக்கிய நிகழ்வான மண்டல பூஜை சனிக்கிழமை (டிச.27) நடைபெறற பின், அதனைத்தொடர்ந்து, இரவு 10 மணிக்கு நடை சாத்தப்பட்டு, மகர விளக்கு பூஜைக்காக டிச. 30-இல் திருநடை திறக்கப்பட உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.