திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வார விடுமுறை நாள்கள் என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இலவச தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
சனிக்கிழமையான இன்று காலை, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
வாரவிடுமுறையை ஒட்டி பக்தர்கள் நேற்று மாலை முதலே திருப்பதிக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வந்தது. இதனால் இலவச தரிசனத்தில் 24 மணி காத்திருந்து வழிபாடு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தி அமைதியான சேவை வழங்க தேவஸ்தான அதிகாரிகளுக்கு பக்தர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், திருப்பதிக்கு வரும் பக்தர்களிடம் சில மோசடி நபர்கள், தரிசனம் செய்யவும், தங்குமிடத்தையும் ஏற்படுத்தித் தருவதாக மோசடியில் ஈடுபடுவதாகவும், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், பக்தர்களை ஏமாற்றுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க.. ஈரானையே உலுக்கிய இஸ்ரேலின் பெண் உளவாளி! தடயமே இல்லாமல் மாயமான கதை!!
இதையும் படிக்க.. ஈரான் அணு விஞ்ஞானியை ரோபோ-ஏஐ மூலம் தட்டித் தூக்கிய இஸ்ரேல்! 2020ல் நடந்த திகிலூட்டும் சம்பவம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.