நவீன ஒலிம்பிக் போட்டியில் 1,000 தங்கப் பதக்கம் வென்ற முதல் நாடு என்ற பெருமையைப் பெற்றது அமெரிக்கா.
நவீன ஒலிம்பிக் போட்டி 1896-ஆம் ஆண்டு தொடங்கியது. அதுமுதலே ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று வரும் அமெரிக்கா, 2012-இல் நடைபெற்ற லண்டன் ஒலிம்பிக் போட்டி வரையில் 977 தங்கப் பதக்கங்களை வென்றிருந்தது.
இந்த நிலையில் ரியோ ஒலிம்பிக் போட்டியில் மகளிர் 4ல100 மீ. மெட்லீ தொடர் நீச்சல் போட்டியில் கேத்லீன் பேக்கர், லில்லி கிங், டேனா வால்மர், சைமோன் மானுவேல் ஆகியோர் அடங்கிய அணி தங்கம் வென்றபோது, நவீன ஒலிம்பிக் போட்டியில் 1,000 தங்கப் பதக்கங்கள் வென்ற முதல் நாடு என்ற
வரலாற்று சாதனையைப் படைத்தது அமெரிக்கா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.