முகப்பு
விளையாட்டு

காமன்வெல்த் போட்டி: இந்திய மகளிர் அபார வெற்றி (ஹைலைட்ஸ் விடியோ) 

காமன்வெல்த் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் மகளிருக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய மகளிரணி அபார வெற்றி பெற்றது. 

Updated On : 2 ஆகஸ்ட் 2022, 11:57 am IST
பகிர்:

காமன்வெல்த் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் மகளிருக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய மகளிரணி அபார வெற்றி பெற்றது. 

மழையால் ஆட்டம் 18 ஓவர்களுக்கு மாற்றப்பட்டது. முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 99 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பாகிச்தான் சார்பில் முனீப் அலி மட்டும் 32 ரன்களை எடுத்தார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். 

அடுத்து ஆடிய இந்திய மகளிர் அணி 11.4 ஓவர்களில் 1012 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஸ்மிருதி மந்தனா 63 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் ஆடினார். 

Advertisement

Advertisement

முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றாலும் இப்போடியில் இந்தியா சிறப்பாக விளையாடியது. அடுத்த போட்டி ஆகஸ்ட் 3 ஆம் தேதி பார்படோஸ் அணியுடன் விளையாடும். இப்போட்டியில் இந்திய அணி வென்றால், அரை இறுதிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.