சர்வதேச டி20 போட்டியில் சதம் அடித்த 5வது இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார் சூர்ய குமார் யாதவ்.
இங்கிலாந்துக்கு எதிரான நேற்றைய டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் தனது 19வது சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 55 பந்துகளில் 117 ரன்களை குவித்தார். இதில் 14 பவுண்டரிகள், 6 சிக்ஸர்களும் அடங்கும்.
இப்போட்டியில் இந்திய அணி தோல்வியுற்றாலும் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
இதுவரை சர்வதேச டி20 போட்டியில் சதமடித்த இந்திய வீரர்கள் பட்டியல்:
ரோகித் ஷர்மா (4 சதங்கள்)
கே எல் ராகுல் (2 சதங்கள்)
சுரேஷ் ரெய்னா (1 சதம்)
தீபக் ஹூடா (1 சதம்)
சூர்யகுமார் யாதவ் (1 சதம்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.