விளையாட்டு

கவுண்டி கிரிக்கெட்டில் புதிய சாதனை

இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் கவுண்டி கிரிக்கெட் போட்டியில் கிளாமோர்கன் அணி 750 ரன்களை கடந்து சாதனைப் படைத்துள்ளது. 

DIN

இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் கவுண்டி கிரிக்கெட் போட்டியில் கிளாமோர்கன் அணி 750 ரன்களை கடந்து சாதனைப் படைத்துள்ளது. 

இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி டிவிஷன் 2இல் கிளாமோர்கன் அணியும் லெய்செஷ்டர்ஷைர் அணியும் விளையாடி வருகின்றன. இதில் முதல் இன்னிங்ஸில் லெய்செஷ்டர்ஷைர் அணி 584 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதில் முல்டர் அதிகபட்சமாக 156 ரன்கள் எடுத்தார்.  

அடுத்து ஆடிய கிளாமோர்கன் அணியில் கோலின் இங்கிரம் 139 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தற்போது கிரிஷ் குகே 173 ரன்களும் சாம் நார்த்தீஸ்ட் 386 ரன்ளுடனும் களத்தில் விளையாடி வருகின்றனர். 

கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் கிளாமோர்கன் அணி அதிகபட்ச ஸ்கோரை அடித்து சாதனைப் படைத்துள்ளது. இதற்கு முன் 2000இல் 718 ரன்களை எடுத்திருந்தது. தற்போது 760 ரன்களுடன் விளையாடி வருகிறது. 

சாம் நார்த்தீஷ்டும் அபாரமாக ஆடி வருகிறார். 2022 கவுண்டி கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோரை அடித்தவரும் இவரே என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்திரிக்க காங்கிரஸ் முயற்சி: ஃபட்னவீஸ்

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோருக்கான முக்கிய அறிவிப்பு!

அஞ்சல் துறையில் மாற்றம்: செப்.1 முதல் பதிவு அஞ்சல் அனுப்ப முடியாது!

பெங்களூரில் 13 வயது சிறுவன் எரித்துக் கொலை! காரணம் என்ன?

ஆணவப்படுகொலை செய்யப்பட்ட Kavin உடலுக்கு KN Nehru நேரில் அஞ்சலி!

SCROLL FOR NEXT