விளையாட்டு

டி20 தொடரை வென்றது நியூசிலாந்து அணி

DIN

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது மிட்செல்  சாண்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணி. 

முதலில் பேட்டிங் ஆடிய அயர்லாந்து அணி 20 ஓவர்களுக்கு 174 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக பால் ஸ்டிரிங் 40 ரன்களும், மார்க் அடைர் 37 ரன்களும் எடுத்தனர். அடுத்து ஆடிய நியூசிலாந்து அணியில் கிளென் பிலிப்ஸ் 56 ரன்களும், டேரில் மிட்செல் 48 ரன்களும் எடுத்தனர். ஜிம்மி நீஷம் 6 பந்துகளில் 23 ரன்களை எடுத்தார். நியூசிலாந்து அணி 19 ஓவரில் 180 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. 

அயர்லாந்துக்கு சுற்றுபயணம் செய்துள்ள நியூசிலாந்து அணி 3வது டி20 போட்டியிலும் வென்றது. இதன் மூலம் 3-0 என்ற கணக்கில் தொடரினை வென்று சாதனைப் படைத்துள்ளது. 

ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருது கிளென் பிலிப்ஸ்க்கு வழங்கப்பட்டது. மிட்செல் சாண்ட்னர் கேப்டனாக இருந்த முதல் தொடரே வெற்றியில் ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என் பார்வை உன்னோடு..

சந்தேஷ்காளியில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதற்கான ஆதாரம் இல்லை: மம்தா

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

SCROLL FOR NEXT