விளையாட்டு

காமன்வெல்த் கிரிக்கெட்: இந்திய மகளிர் தோல்வி (ஹைலைட்ஸ் விடியோ)

காமன்வெல்த் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலிய  மகளிர் அணியிடம் தோல்வியுற்றது. 

DIN

காமன்வெல்த் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலிய  மகளிர் அணியிடம் தோல்வியுற்றது. 

காமன்வெல்த் டி20 கிரிக்கெட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 8 அணிகள் உள்ளது. ஒவ்வொரு அணிக்கும் தலா 3 போட்டிகள் இருக்கு. 2 பிரிவாக பிரிக்கப்பட்டு இருக்கும் இதில் 4 அணிகள் அரையிறுதிக்கு தேர்வு செய்யப்படும். பின்னர் அதில் இரண்டு அணிகள் இறுதிப்போட்டிக்கு தேர்வு செய்யப்படும். இந்த தொடர் மொத்தம் 16 போட்டிகளை கொண்டது குறிப்பிடத்தக்கது. 

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ஷெபாஃலி வெர்மா 48 ரன்களும், இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 52 ரன்களும் எடுத்தனர். 20 ஓவர் முடிவில் 154 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது. ஆஸ்திரேலி அணி சார்பில் ஜெஸ் ஜோனசென் 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். 

அடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும் இறுதியில் சிறப்பாக விளையாடினர். கிரேஸ் ஹாரிஸ் 20 பந்துகளில் 37 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். கார்ட்னர் 35 பந்துகளில் 52 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். 19 ஓவர்களில் 157 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் செய்ய வேண்டியது

தைபேயில் கத்திக் குத்து தாக்குதல்: 9 பேர் காயம்

2025 தேர்தல்கள்: பாஜகவின் அமோக வெற்றியும் காங்கிரஸின் ஆறுதல் வெற்றியும்!

பிரதமர் மோடி நாளை மே.வங்கம், அசாம் பயணம்!

கடைசி டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன்!

SCROLL FOR NEXT