முகப்பு
விளையாட்டு

அதிரடி காட்டிய இஷான் கிஷன்: தில்லி அணிக்கு 178 ரன்கள் இலக்கு

தொடக்கம் முதலே மும்பை அணியின் தொடக்க வீரர்களான ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் அதிரடியாக விளையாடினர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:48 AM
இஷான் கிஷன்
பகிர்:

ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் 15ஆவது ஐபிஎல் சீசன் போட்டி நேற்று தொடங்கியது. சீசனின் முதல் போட்டியில், கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி தோல்வி அடைந்தது.

இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற தில்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. தொடக்கம் முதலே மும்பை அணியின் தொடக்க வீரர்களான ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் அதிரடியாக விளையாடினர்.

இருப்பினும், சிறப்பாக பந்து வீசிய குல்தீப் ரோகித்தின் விக்கெட்டை கைப்பற்றினார். குல்தீப்பின் சுழலில் மற்ற வீரர்கள் நிலைகுலைந்தாலும் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய, கிஷன் அரை சதம் அடித்தார். இறுதியாக, ஐந்து விக்கெட் இழப்புக்கு மும்பை 177 ரன்களை எடுத்துள்ளது. அந்த அணி சார்பாக அதிகபட்சமாக இஷான் கிஷன் 48 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

தில்லி அணி சார்பாக குல்தீப் 18 ரன்கள் விட்டு கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி தில்லி அணி களமிறங்கியுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →