விளையாட்டு

சென்னை அணியில் 3 வீரர்கள் அரைசதம்: கொல்கத்தாவுக்கு 236 ரன்கள் இலக்கு

கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 235 ரன்கள் குவித்தது.

DIN

கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 235 ரன்கள் குவித்தது.

ஐபிஎல் போட்டியின் 33-ஆவது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

சென்னை அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் - டெவன் கான்வே ஜோடி களமிறங்கியது. இருவரும் ஆரம்ப முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருப்பினும், ருதுராஜ் 20 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அஜிங்க்ய ரஹானேவும் அதிரடியாக ஆடினார்.

கான்வே 40 பந்துகளில் 56 ரன்களுக்கு வெளியேற ஷிவம் துபே களம் கண்டார். அவர் 21 பந்துகளில் 50 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஜடேஜா 8 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் நிலைத்து ஆடிய ரஹானே 29 பந்துகளில் 71 ரன்கள் எடுத்தார்.

இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 235 ரன்கள் குவித்தது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்

பாதுகாப்பு நிலைமை மோசமடைவதால் ஈரானை விட்டு உடனடியாக வெளியேறுங்கள்: இந்தியா்களுக்கு தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்

பன்முகப் பரிமாணங்கள் கொண்டவர் மூதறிஞர் ராஜாஜி! குடியரசுத் தலைவர் திரெளபதி முா்மு புகழாரம்

பெரம்பலூா் மாவட்டத்தில் 5.55 லட்சம் வாக்காளா்கள்

இருவேறு விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT