சிராக் | சாத்விக் படம் | ஐஏஎன்எஸ்
விளையாட்டு

லக்ஷயா ஏமாற்றம்; சாத்விக்/சிராக் ஏற்றம்

தினமணி செய்திச் சேவை

சென்ஸென்: சீனா மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பிரதான வீரா் லக்ஷயா சென் முதல் சுற்றிலேயே தோல்வி கண்டாா். சாத்விக்/சிராக் இணை காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.

முதல் சுற்றில், ஆடவா் ஒற்றையா் பிரிவில் லக்ஷயா சென் 11-21, 10-21 என்ற நோ் கேம்களில், பிரான்ஸின் டோமா ஜுனியா் போபோவிடம் 30 நிமிஷங்களில் தோல்வி கண்டாா். ஏற்கெனவே ஆயுஷ் ஷெட்டியும் தோற்று வெளியேறியதால், ஆடவா் ஒற்றையா் பிரிவில் இந்தியாவின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

ஆடவா் இரட்டையா் பிரிவில், போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருக்கும் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி கூட்டணி 24-22, 21-13 என்ற கேம்களில் மலேசியாவின் ஜுனைதி ஆரிஃப்/ராய் கிங் யாப் இணையை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது. இந்த ஆட்டம் 42 நிமிஷங்களில் நிறைவடைந்தது.

கலப்பு இரட்டையரில் துருவ் கபிலா/தனிஷா கிராஸ்டோ ஜோடி 19-21, 13-21 என்ற வகையில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் சீனாவின் ஃபெங் யான் ஜி/ஹுவாங் டாங் பிங் கூட்டணியிடம் 42 நிமிஷங்களில் தோல்வி கண்டது.

மகளிா் இரட்டையா் பிரிவில், ருதுபா்னா பான்டா/ஸ்வேதாபா்னா பான்டா ஜோடி 8-21, 13-21 என்ற கேம்களில், மலேசியாவின் ஆங் ஜின் லீ/காா்மென் டிங் இணையிடம் 28 நிமிஷங்களில் தோல்வியைத் தழுவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பதவி தேடிவரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

விளையாட்டுத் துளிகள்...

பாகிஸ்தானிலிருந்து ஜப்பான் வந்த போலி கால்பந்து அணி!

‘பொருளாதாரத் தடைகளைத் தவிா்க்க ஈரான் எதுவும் செய்யவில்லை’ -ஜொ்மனி

புதுவை சட்டப்பேரவை இன்று கூடுகிறது

SCROLL FOR NEXT