ஆசிய விளையாட்டுப் போட்டிகள்-2018

இந்தத் துறையில் மட்டுமே பணிபுரிவேன்: அரசு வேலை தொடர்பாக வீராங்கனை சுதா சிங்கின் நிபந்தனை

எனக்கு வேலை அறிவித்த முதல்வருக்கு நன்றி. ஆனால் என்னுடைய விண்ணப்பம் கடந்த நான்கு வருடங்களாக... 

எழில்

ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் 3,000 மீ. ஸ்டீபிள்சேஸ் பிரிவில் இந்தியாவின் சுதா சிங் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஜகார்த்தாவில் நடைபெற்று வரும் ஆசியப் போட்டியில் நேற்று நடைபெற்ற மகளிர் 3,000 மீ. ஸ்டீபிள்சேஸ் போட்டியில் இந்தியாவின் சுதா சிங் 9 நிமிடம், 40.03 விநாடிகளில் இலக்கை எட்டி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இந்நிலையில் சுதா சிங்குக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகையும் அரசு வேலையும் வழங்கவுள்ளதாக உத்தரப் பிரதேச அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து சுதா சிங் கூறியதாவது:

இந்த அறிவிப்பால் எனக்கு மகிழ்ச்சியும் இல்லை, வருத்தமும் இல்லை. இந்த வேலை எனக்கு முன்பே வழங்கப்பட்டிருக்கவேண்டும். 2014-ல் வேலைக்காக நான் விண்ணபித்தேன். நல்லவேளை இப்போதாவது வேலை தருவதாக அறிவித்துள்ளார்கள். 

நான் விளையாட்டுத்துறையில் பணிபுரிய விரும்புகிறேன். அத்துறையில் இணை இயக்குநராகப் பணிபுரிய எனக்குத் தகுதி உண்டு. எனக்கு வேலை அறிவித்த முதல்வருக்கு நன்றி. ஆனால் என்னுடைய விண்ணப்பம் கடந்த நான்கு வருடங்களாக அரசு அலுவலகங்களில் உள்ளதை அவர் அறிந்திருக்க மாட்டார் என நினைக்கிறேன். நான் விளையாட்டுத் துறையில் மட்டுமே பணிபுரிவேன். வேறு துறையில் என்னால் பணியாற்ற முடியாது என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போலீஸ் டாக்டர்... ஜனனி அசோக் குமார்!

வெண்ணிலவே... வெண்ணிலவே... கஜோல்!

நீயாக இரு... ஐஸ்வர்யா ராஜேஷ்!

இரவில் சென்னை, 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

என் வாழ்வைக் காதலிக்கிறேன்... எடின் ரோஸ்!

SCROLL FOR NEXT