முகப்பு
கிரிக்கெட் உலகக் கோப்பை-2019

100 விக்கெட்டுகள்: பும்ராவின் புதிய சாதனை

ஒருநாள் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை விரைவாக எடுத்த 2-வது இந்தியப் பந்துவீச்சாளர் என்கிற பெருமையை...

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:27 AM
பகிர்:

ஒருநாள் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை விரைவாக எடுத்த 2-வது இந்தியப் பந்துவீச்சாளர் என்கிற பெருமையை பும்ரா பெற்றுள்ளார்.

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை ஆட்டம் லீட்ஸில் இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்றுள்ள இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் சஹால், ஷமிக்குப் பதிலாக குல்தீப், ஜடேஜா ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.

இந்நிலையில் தொடக்க வீரரும் இலங்கை அணி கேப்டனுமான கருணாரத்னேவை 10 ரன்களில் வீழ்த்தினார் பும்ரா. இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்களின் பட்டியலில் அவர் இடம்பிடித்துள்ளார்.

மேலும் 100 விக்கெட்டுகளை அதிவிரைவாக எடுத்த 2-வது இந்தியர் என்கிற பெருமையையும் அவர் பெற்றார்.

குறைந்த ஒருநாள் ஆட்டங்களில் 100 விக்கெட்டுகளை எடுத்த இந்திய வீரர்கள்

56 ஷமி
57 பும்ரா
59 இர்பான் பதான்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.