முகப்பு
கிரிக்கெட் உலகக் கோப்பை-2019

அவர் இடத்தில் நான் இருந்திருந்தாலும் வருந்தியிருப்பேன், அதற்காக மன்னிப்பு கேட்கிறேன்: விராட் கோலி

பேட்டிங் செய்துகொண்டிருந்த விராட் கோலி குறுக்கிட்டு, அதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல் இருக்குமாறு அறிவுறுத்தினார்.

Updated On : 10 ஜூன், 2019 at 9:32 AM
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 2:39 PM

இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான உலகக் கோப்பை ஆட்டம் லண்டன் ஓவல் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்நிலையில், போட்டியின் இடையே இந்திய ரசிகர்களை விராட் கோலி கண்டிக்கும் விடியோ வெளியாகியுள்ளது. அதில் இந்திய ரசிகர்கள் பலர் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தை அவமதிக்கும் விதமாக கூச்சலிட்டுள்ளனர். 

அப்போது பேட்டிங் செய்துகொண்டிருந்த விராட் கோலி குறுக்கிட்டு, அதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல் அவருக்கு ஆதரவும், உற்சாகமும் அளிக்குமாறு அறிவுறுத்தினார். இதுகுறித்து போட்டி முடிந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த விராட் கோலி கூறுகையில்,

Advertisement

எல்லாம் நடந்து முடிந்து நீண்ட காலமாகிவிட்டது. அதிலிருந்து மீண்டு வந்த ஐபிஎல் தொடரிலும் பங்கேற்றனர். கடந்த காலங்களில் எங்களுக்கு இடையிலும் களத்தில் சிறு சிறு தகராறுகள் ஏற்படக்கூடும். 

இருப்பினும் அவர்கள் தங்கள் தவறுகளை திருத்திக்கொண்டு மீண்டும் கடின முயற்சி செய்து கிரிக்கெட் விளையாட மீண்டு வந்து ஆஸ்திரேலிய அணிக்கு சிறப்பான பங்களிப்பையும் அளித்து வருகின்றனர். அதற்காக நடந்து முடந்த ஒன்றுக்காக ஒவ்வொரு முறையும் களத்துக்குச் செல்லும் ஸ்மித், வார்னர் ஆகியோரை அவமதிப்பது தவறானது. 

மைதானத்தில் நிறைய இந்திய ரசிகர்கள் இருந்தனர். எனவே வீரர்களை அவமதித்து தவறான முன் உதாரணத்தை இந்திய ரசிகர்கள் ஏற்படுத்திவிடக் கூடாது என்று நினைத்தேன். ஒருவேளை ஸ்மித் இடத்தில் நான் இருந்து அதே தவறை செய்து அதனை ஒப்புக்கொண்டு மீண்டும் கிரிக்கெட் விளையாட வந்திருந்தால், ரசிகர்களின் அதுபோன்ற செயலை நிச்சயம் ஏற்றுக்கொண்டிருக்க மாட்டேன், நிச்சயம் வருந்தியிருப்பேன்.

ஸ்மித் மற்றும் வார்னர் மீது மைதானத்தில் இருக்கும் ரசிகர்கள் வேண்டுமென்றே அவமதிக்கும் விதமாக கூச்சலிடுவது கடந்த சில போட்டிகளாகவே தொடர்கிறது. என்னைப் பொறுத்தவரையில் இது தவறான செயலாகும். எனவே ரசிகர்களின் சார்பில் நான் அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டேன் என்றார். 

விராட் கோலியின் இந்த செயலை ஐசிசி மட்டுமல்லாது கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என அனைவராலும் பாராட்டுக்குள்ளாகி வருகிறது. முன்னதாக, பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் உண்மையை ஒப்புக்கொண்ட ஸ்டீவ் ஸ்மித், அதற்கு தண்டனையாக ஒரு வருட தடைக்குப் பின்னர் தற்போது மீண்டும் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.