முகப்பு
கிரிக்கெட் உலகக் கோப்பை-2019

கடந்த தொடரின் தோல்விதான் இதற்கு உத்வேகம் அளித்தது: ஆஸி. வெற்றி குறித்து விராட் கோலி

அப்போது ஆஸி. அணியின் பிரதான வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் இடம்பெறவில்லை. 

Updated On : 10 ஜூன், 2019 at 9:41 AM
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 2:39 PM

இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான உலகக் கோப்பை ஆட்டம் லண்டன் ஓவல் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதையடுத்து போட்டி முடிந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த விராட் கோலி கூறுகையில்,

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவில் நடைபெற்ற தொடரில் முன்னிலைப் பெற்ற பின்னரும் நாங்கள் இழந்தோம். அந்த தோல்வி தான் இந்தப் போட்டியில் சிறப்பாக செயல்பட உத்வேகம் அளித்தது. அப்போது ஆஸி. அணியின் பிரதான வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் இடம்பெறவில்லை. ஆனால், இன்றைய போட்டியில் அவர் விளையாடினார். 

Advertisement

எனவே இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாட வேண்டும் என்று முடிவு செய்தோம். பேட்டிங், பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் என அனைத்து துறைகளிலும் சிறப்பாகவே செயல்பட்டோம். அனைவரும் நல்ல ஆட்டத்திறனை வெளிப்படுத்தினோம். இதை விட சிறந்த வெற்றியை நிச்சயம் பெற முடியாது. 

மேலும் ஆஸி.க்கு எதிரான இதுபோன்ற முக்கியப் போட்டிகளில் இந்தியா வெற்றிபெற்ற வரலாறுகளும் உண்டு. எனவே இந்தப் போட்டியும் சிறப்பாகவே அமைந்தது என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.