விஜய் சங்கருக்கும் காயம்: பயப்பட ஒன்றுமில்லை என பிசிசிஐ தகவல்
இரு வீரர்களுக்குக் காயம் ஏற்பட்டதால் ஏற்கெனவே மிகவும் பாதிப்படைந்துள்ளது இந்திய அணி...
இரு வீரர்களுக்குக் காயம் ஏற்பட்டதால் ஏற்கெனவே மிகவும் பாதிப்படைந்துள்ளது இந்திய அணி. காயம் காரணமாக ஷிகர் தவன் உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து வெளியேறியுள்ளார். புவனேஸ்வர் குமார் சிகிச்சை பெற்று வருகிறார். ஜூன் 30 அன்று இங்கிலாந்துக்கு எதிராக அவர் ஆட வாய்ப்புள்ளது.
இந்நிலையில், ஆல்ரவுண்டர் விஜய் சங்கருக்கு நேற்று காயம் ஏற்பட்டுள்ளது. பயிற்சியின்போது பும்ரா வீசிய பந்து அவருடைய காலில் பட்டு, காயம் ஏற்பட்டதால் பயிற்சியிலிருந்து விலகியுள்ளார் விஜய் சங்கர்.
இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பிசிசிஐ சார்பில் அளித்த பேட்டியில், காயம் காரணமாக விஜய் சங்கருக்கு வலி ஏற்பட்டது. ஆனால் பிறகு அது குறைந்துவிட்டது. பயப்படும்படி எதுவும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.