முகப்பு
கிரிக்கெட்

வங்கதேசம் - பாகிஸ்தான் முதல் டெஸ்ட்! மழையினால் பாதிப்பு!

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் பாகிஸ்தான் 158 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

Updated On : 21 ஆகஸ்ட், 2024 at 3:58 PM
வங்கதேசம் - பாகிஸ்தான் முதல் டெஸ்ட்
பகிர்:

வங்கதேச அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று (ஆகஸ்ட் 21) தொடங்கியது.

மழையின் காரணமாக போட்டி மிகத் தாமதமாகவே தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது.

தொடக்கத்திலேயே பாகிஸ்தான் அணி தடுமாறியது. 3.3ஆவது ஓவரில் ஷபீக்கு 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அடுத்து 6.5ஆவது ஓவரில் ஷான் மசூத் 6 ரன்களுக்கு வெளியேறினார் . அடுத்து வந்த பாபர் அசாம் டக்கவுட் ஆகி அதிர்ச்சியளித்தார்.

டாப் ஆர்டர்களை இழந்த பாகிஸ்தான் அணியை சைம் ஆயூப் (56), சௌத் ஷகீல் மீட்டனர். தற்போது களத்தில் சௌத் ஷகீல் 57 ரன்களுடனும் முகமது ரிஸ்வான் 24 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருக்கின்றனர்.

போதிய வெளிச்சமின்மை காரணமாக போட்டி விரைவாகவே முடிக்கப்பட்டது. 41 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன. 4 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணி முதல்நாள் முடிவில் 158 ரன்கள் எடுத்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →