இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி 358 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று (டிசம்பர் 5) செயிண்ட் ஜியார்ஜ் பார்க் மைதானத்தில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதல் இன்னிங்ஸில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 358 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதையும் படிக்க: அடிலெய்டு டெஸ்ட்டின் முதல் நாளில் புதிய சாதனை!
சதம் விளாசிய ரியான் ரிக்கல்டான், கைல் வெரைன்
தென்னாப்பிரிக்கா தரப்பில் சிறப்பாக விளையாடிய ரியான் ரிக்கல்டான் மற்றும் கைல் வெரைன் இருவம் சதம் விளாசி அசத்தினர். ரியான் ரிக்கல்டான் 101 ரன்களில் ஆட்டமிழந்தார். அதில் 11 பவுண்டரிகள் அடங்கும். கைல் வெரைன் 105 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 12 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். கேப்டன் டெம்பா பவுமா 78 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இலங்கை தரப்பில் லகிரு குமாரா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அஷிதா ஃபெர்னாண்டோ 3 விக்கெட்டுகளையும், விஸ்வா ஃபெர்னாண்டோ 2 விக்கெட்டுகளையும் மற்றும் பிரபாத் ஜெயசூர்யா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இதையும் படிக்க: பிங்க் பந்து கிரிக்கெட்டில் சாதனை படைத்த மிட்செல் ஸ்டார்க்..!
இலங்கை அணி இரண்டாம் நாளில் உணவு இடைவேளையின்போது, முதல் இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்துள்ளது. திமுத் கருணாரத்னே 5 ரன்களுடனும், பதும் நிசங்கா 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இலங்கை அணி தென்னாப்பிரிக்காவைக் காட்டிலும் 339 ரன்கள் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.