ஜோ ரூட் படம் | AP
கிரிக்கெட்

100-வது முறை... டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோ ரூட் புதிய சாதனை!

டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

DIN

டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

இங்கிலாந்து அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி நியூசிலாந்தை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து 378 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து அணி நியூசிலாந்தைக் காட்டிலும் 533 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

100-வது முறை...

இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் இரண்டாவது இன்னிங்ஸில் அரைசதம் அடித்தார். அவர் 73 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். இரண்டாவது இன்னிங்ஸில் அரைசதம் அடித்த ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 முறை அரைசதம் கடந்து ஜோ ரூட் சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 முறை அரைசதம் கடந்த முதல் வீரர் என்ற பெருமையும் இவரைச் சேரும்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை அரைசதம் கடந்த வீரர்கள்

சச்சின் டெண்டுல்கர் - 119 முறை

ஜாக் காலிஸ் - 103 முறை

ரிக்கி பாண்டிங் - 103 முறை

ஜோ ரூட் - 100* முறை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியாவில் 15 பில்லியன் டாலர் முதலீடு! கூகுள் அறிவிப்பு

வாட்ஸ்ஆப்பில் போலி லிங்க்குகளால் பணம் பறிபோக வாய்ப்பு! எச்சரிக்கை!!

ரூ.5,000 கோடி வங்கி முதலீடு! உலகின் பணக்கார கிராமம் இருப்பது இந்தியாவில்!!

பிரதீப் எல்லாம் ஹீரோவா?பத்திரிகையாளருக்கு பதிலடி கொடுத்த சரத் குமார்!

ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,960 உயர்ந்த தங்கம்!

SCROLL FOR NEXT