ஆஸி. கேப்டன் பாட் கம்மின்ஸ்  படம்: ஏபி
கிரிக்கெட்

எனக்கு பயமில்லை... அஸ்வின் தலைசிறந்தவர்: ஆஸி. கேப்டன் அதிரடி!

பிரிஸ்பேன் டெஸ்ட் சமனில் முடிந்தது இந்தியாவுக்கு சாதகமாக அமையவில்லை என ஆஸி. கேப்டன் கூறியுள்ளார்.

DIN

பிரிஸ்பேன் டெஸ்ட் சமனில் முடிந்தது இந்தியாவுக்கு சாதகமாக அமையவில்லை என ஆஸி. கேப்டன் பாட் கம்மின்ஸ் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

ஆஸி அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்களுக்கு ஆல் அவுட்டாக இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 252 ரன்கள் எடுத்தது.

ஆஸி. அணி 2-வது இன்னிங்ஸில் 89 ரன்களுக்கு டிக்ளேர் செய்ய இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 2.1 ஓவர்கள் விளையாடியபோது மோசமான வானிலையைத் தொடர்ந்து மழையினால் போட்டி சமனில் முடிந்தது.

இந்த நிலையில் பாட் கம்மின்ஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது:

எனக்கு பயமில்லை

போட்டியின் போக்கு இந்தியாவின் பக்கம் சென்றதாக நான் நினைக்கவில்லை. உத்வேகம் குறித்த எந்த பயமும் எனக்கு இல்லை. இந்த வாரத்தில் நாங்கள் நிறையவே எடுத்துக்கொள்வோம்.

சில சிறந்த பார்ட்னர்ஷிப்கள் அமைந்தது 450 (445) ரன்களை குவித்துள்ளோம். 250இல் (260) இந்தியாவை ஆட்டமிழக்க வைத்துள்ளோம். அதனால் இந்த வாரத்தில் பல நல்ல விஷயங்களை எடுத்துக்கொள்வோம்.

5 நாளில் காற்று, மழையில் அதிகமாக பாதிக்கப்பட்டோம். அது வெறுப்பாக இருந்தது.

அஸ்வின் தலைசிறந்தவர்

அஸ்வின் ஓய்வு ஆச்சரியமாக இருந்தது. உலகம் முழுவதும் சிறப்பாக விளையாடியுள்ளார். சுழல்பந்து வீச்சாளர்கள் அவர்மாதிரி நீண்டநாள் விளையாடுவதில்லை. தலைசிறந்த வீரர் அவர். இந்தியா, ஆஸி.யில் அவர் எங்களுக்கு மிகச் சவலான பந்துவீச்சாளராக இருந்துள்ளார். எங்களது அணியில் அவர்மீது மிகுந்த மரியாதை இருக்கிறது.

ஹேசில்வுட் விலகல், ஹெட் விளையாடுவார்

ஹேசில்வுட் தொடரிலிருந்து விலகுகிறார். நாங்கள் அவரை மதிக்கிறோம். அவரது பங்கு எங்களது அணிக்கு முக்கியம்.

ஹெட் விளையாடுவார். ஆஸி.யில் டாப் 3 இல் விளையாடுவது கடினம். ஆடுகளம் கடினமானதாக இருக்கும். மெக்ஸ்வீனி நன்றாக விளையாடினார். இன்றும் நன்றாகவே விளையாடினார்.

அவர் விரும்பிய ரன்களை குவிக்காமல் இருந்தாலும் சில முக்கியமான நேரங்களில் நன்றாக விளையாடியுள்ளார் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாம்பியன் லீக்கில் 100% வெற்றியுடன் வரலாறு படைத்த ஆர்செனல்!

யு19 உலகக் கோப்பை: ஜோரிச் வான் சதம் விளாசல்; இலங்கைக்கு 262 ரன்கள் இலக்கு!

தனுஷின் 55 ஆவது படத்துக்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்!

குற்றவாளிகளைக் காப்பாற்ற திமுக அரசு எந்த எல்லைக்கும் செல்கிறது! - அண்ணாமலை விமர்சனம்

கொள்ளை அடிப்பதில் மட்டுமே கவனம்; பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பில் இல்லை: விஜய்

SCROLL FOR NEXT