அஸ்வினை அண்ணா என்றழைத்த ஜடேஜா!
சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த அஸ்வினை அண்ணா எனக் கூறி பதிவிட்டுள்ளார் ஜடேஜா.
இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா அஸ்வினை அண்ணா என்று பதிவிட்டது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அஸ்வின் ஜடேஜா இருவரும் இந்தியாவுக்கும் சரி சிஎஸ்கே அணிக்கும் முக்கியமான வீரர்கள். சகோதரர்கள் போலவே பல வருடங்கள் ஒன்றாக இணைந்து விளையாடியுள்ளார்கள்.
இந்தியாவின் பௌலிங் ஆல்-ரவுண்டரான ரவிச்சந்திரன் அஸ்வின் (38), சா்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று (டிச.18) அறிவித்தாா்.
Advertisement
Advertisement
பாா்டா் - காவஸ்கா் கோப்பை டெஸ்ட் தொடருக்காக ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணியிலிருக்கும் அவா், கிரிக்கெட் உலகமும், ரசிகா்களும் எதிா்பாராத இந்த முடிவை, தொடரின் இடையே அறிவித்திருக்கிறாா். ஐபிஎல் உள்ளிட்ட லீக் போட்டிகளில் அவா் தொடா்ந்து விளையாடவுள்ளாா்.
தனது இன்ஸ்டா பக்கத்தில் ரவிந்திர ஜடேஜா ஸ்டோரில் கூறியதாவது:
உங்களுடன் இத்தனை ஆண்டுகள் ஓய்வறையை பகிர்ந்துகொண்டது தனிச்சலுகையாக கருதுகிறேன்.
அண்ணா ஃபார் ஏ ரீசன் என்ற ஹேஷ்டேக்கையும் பகிர்ந்துள்ளார்.
இந்திய அணிக்காகவும் சிஎஸ்கே அணிக்காகவும் அஸ்வின் - ஜடேஜா ஒன்றாக விளையாடியுள்ளார்கள். மீண்டும் அஸ்வின் 2025 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கேவுக்காக விளையாடவிருப்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.