முகப்பு
கிரிக்கெட்

கேப்டனாக புதிய சாதனை படைத்த ஹர்மன்பிரீத் கௌர்!

இந்திய அணியின் கேப்டனாக ஹர்மன்பீரித் கௌர் ஒருநாள் போட்டிகளில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

Updated On : 22 டிசம்பர், 2024 at 4:13 PM
ஹர்மன்பிரீத் கௌர்
பகிர்:

இந்திய அணியின் கேப்டனாக ஹர்மன்பீரித் கௌர் ஒருநாள் போட்டிகளில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று (டிசம்பர் 22) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 211 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம், 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

புதிய சாதனை

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பீரித் கௌர் 23 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். இதன் மூலம், ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக 1000 ரன்களைக் கடந்த வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இந்தப் போட்டியில் பேட்டிங்கில் ஸ்மிருதி மந்தனா அதிகபட்சமாக 91 ரன்கள் எடுத்தார். அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ரேணுகா சிங் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ரேணுகா சிங்குக்கு ஆட்டநாயகி விருது வழங்கப்பட்டது.

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை மறுநாள் (டிசம்பர் 24) நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →