ஐசிசி யு-19 உலகக் கோப்பைக்கான இந்திய மகளிரணி இன்று (டிசம்பர் 24) அறிவிக்கப்பட்டுள்ளது.
19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிசி உலகக் கோப்பை டி20 தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி 18 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 2 ஆம் தேதி வரை மலேசியாவில் நடைபெறவுள்ளது.
இந்த ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. இந்திய அணியை நிகி பிரசாத் கேப்டனாக வழிநடத்துகிறார். சானிகா சால்கே அணியின் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான அதிகாரபூர்வ அட்டவணை வெளியீடு!
இந்த டி20 உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்று விளையாடும் 16 அணிகள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்திய அணி குழு ஏ-வில் இடம்பெற்றுள்ளது. இந்திய அணியுடன் மலேசியா, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இலங்கை அணிகள் இடம்பெற்றுள்ளன.
இந்திய அணி வருகிற ஜனவரி 19 ஆம் தேதி மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக அதன் முதல் போட்டியில் விளையாடுகிறது. மலேசியாவுக்கு எதிராக ஜனவரி 21 ஆம் தேதியும், இலங்கைக்கு எதிராக ஜனவரி 23 ஆம் தேதியும் இந்திய அணி விளையாடவுள்ளது.
ஐசிசி யு-19 உலகக் கோப்பைக்கான இந்திய மகளிரணி விவரம்
நிகி பிரசாத் (கேப்டன்), சானிகா சால்கே (துணைக் கேப்டன்), ஜி த்ரிஷா, கமலினி, பவிகா அஹிர், ஈஸ்வரி அவஸரே, மிதிலா வினோத், ஜோஷிதா, சோனம் யாதவ், பருனிகா சிசோடியா, கேசரி த்ரிதி, ஆயுஷி சுக்லா, அனந்திகா கிஷோர், ஷப்னம், வைஷ்ணவி.
மாற்று வீராங்கனைகள்
நந்தனா, ஈரா, அனதி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.