ஸ்டீவ் ஸ்மித் PTI
கிரிக்கெட்

முதல் இன்னிங்ஸில் 474 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா!

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியின் ஸ்கோர் விவரங்கள்...

DIN

பாக்ஸிங் டே டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் இந்தியாவுக்கு எதிராக 474 ரன்களை ஆஸ்திரேலியா அணி குவித்துள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி நேற்று (டிசம்பர் 26) மெல்போர்னில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது.

இந்த நிலையில், இரண்டாவது நாளான இன்று தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளை இழந்து 474 ரன்கள் குவித்துள்ளது.

ஸ்டீவ் ஸ்மித் அதிகபட்சமாக 140 ரன்களை குவித்தார். மேலும், ஆஸ்திரேலியாவின் டாப் ஆர்டர் பேட்டர்கள் அரைசதம் கடந்து அசத்தியுள்ளனர்.

இந்திய பந்துவீச்சாளர்களின் அதிகபட்சமாக பும்ரா 4, ஜடேஜா 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.

தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி 10 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 35 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் ரோஹித் சர்மா 3 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

வத்தலகுண்டு அருகே வேன்கள் மோதல்: 15 போ் பலத்த காயம்

காவல் நிலையங்களில் வீணாகும் பறிமுதல் வாகனங்கள்! சமூக ஆா்வலா்கள் அதிருப்தி!

ஒகேனக்கல்லில் நீா்வரத்து 32,000 கனஅடி: பரிசல் இயக்கவும், குளிக்கவும் தடை

ஆற்று மணல் ஏற்றி வந்த சரக்கு வாகனம் பறிமுதல்

SCROLL FOR NEXT