படம் | ஐசிசி
கிரிக்கெட்

வளர்ந்து வரும் வீரர், வீராங்கனைகள் விருதுக்கான போட்டியாளர்களை அறிவித்த ஐசிசி!

DIN

இந்த ஆண்டின் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர், வீராங்கனைகள் விருதுக்கான போட்டியாளர்களை ஐசிசி இன்று (டிசம்பர் 28) வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டு முழுவதும் சிறப்பாக செயல்பட்ட வீரர், வீராங்கனைகளிலிருந்து வளர்ந்து வரும் வீரர், வீராங்கனைகள் விருதுக்கான முதல் கட்ட போட்டியாளர்களை ஐசிசி அறிவித்துள்ளது.

வளர்ந்து வீரர்களுக்கான போட்டியில் இங்கிலாந்து அணியின் கஸ் அட்கின்சன், பாகிஸ்தானின் சைம் ஆயுப், மேற்கிந்தியத் தீவுகளின் ஷமர் ஜோசப் மற்றும் இலங்கை அணியின் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

வளர்ந்து வரும் வீராங்கனைகளுக்கான போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் அன்னேரி டெர்க்சென், ஸ்காட்லாந்தின் சசிகா ஹோர்லி, இந்தியாவின் ஸ்ரேயங்கா பாட்டீல், அயர்லாந்தின் ஃப்ரேயா சார்ஜண்ட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

வெற்றியாளர்கள் யார் என்பது அடுத்த ஆண்டு ஜனவரி இறுதியில் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளுங்கள்! சசிகாந்த்துடன் ராகுல் பேச்சு!

திருவள்ளூரில் டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஊழியர்கள் போராட்டம்

ஆசிரியர் பணியில் தொடர, பதவி உயர்வுக்கு தகுதித் தேர்வு கட்டாயம்: உச்ச நீதிமன்றம்

திருவள்ளூா் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி, இளைஞா் வெட்டிக் கொலை: 6 பேர் கைது

ருக்கு...🤞💖!

SCROLL FOR NEXT