இந்தியாவுக்கு எதிராக முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 108 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட்டின் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் பேட் செய்தது.
பாகிஸ்தான் அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 19.2 ஓவர்களில் 108 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஸித்ரா அமீன் 25 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, துபா ஹாசன் மற்றும் ஃபாத்திமா சனா அதிகபட்சமாக தலா 22 ரன்கள் எடுத்தனர்.
இந்தியா தரப்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ரேனுகா சிங், பூஜா வஸ்த்ரகார் மற்றும் ஸ்ரேயங்கா பாட்டீல் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.