முகப்பு
கிரிக்கெட்

யு19 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்க அணி 118 ரன்களுக்கு ஆட்டமிழப்பு!

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 118 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

Updated On : 25 ஜனவரி, 2026 at 11:02 AM
பகிர்:

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 118 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நமீபியா கிரிக்கெட் திடலில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடி வருகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, தென்னாப்பிரிக்கா முதலில் விளையாடியது.

முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 32.1 ஓவர்களில் 118 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

அந்த அணியில் பால் ஜேம்ஸ் அதிகபட்சமாக 33 ரன்கள் எடுத்தார். ஜோரிச் வான் 26 ரன்களும், முகமது புல்புல்லா 19 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

ஆஸ்திரேலியா தரப்பில் சார்லஸ் லாச்மண்ட் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். வில் பைரோம் மற்றும் ஆர்யன் சர்மா தலா இரண்டு விக்கெட்டுகளையும், ஹைடன் சில்லர் மற்றும் கேசி பார்ட்டன் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது.

summary

In the Under-19 World Cup match against Australia, the South African team was all out for 118 runs.

முழு கட்டுரையைப் படிக்க →